காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் - தேனியில் பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை ஆசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த மாணவியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், மாணவியை காதலிப்பதாக கூறிய விமல், மாணவியை ஆசைவார்த்தை கூறி பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்ததுடன் அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, தனது நண்பர்கள் 7 பேருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு அந்த மாணவியை மிரட்டியுள்ளார்.

இதைக்கேட்டு, பயந்து போன மாணவி, 7 பேருடனும் உடலுறவு வைத்துக் கொண்டதால், கர்ப்பமாகி சட்டவிரோதமாக கருக்கலைப்பும் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்புத் துறையினர் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக காதலர் விமல் மீது வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on man for harassment in theni


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->