தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு! 4பேர் கைது! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இரண்டு மாணவர்கள் அறிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள  12 ஆம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பத்தன்று முன் விரோதம் காரணமாக இரவு டியூஷன் முடிந்து வரும் வழியில் இருவருக்கும் மீண்டும் மோதிரம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் இருதரப்பு தாக்குதலாக மாறியநிலையில்12ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 12க்கும் மேற்பட்டோர் தாக்கிய அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காயம் அடைந்த ஒரு மாணவனின் தந்தை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேர் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் அவதூறு பேசி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்ததாக வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இரண்டு மாணவர்கள் பிரச்சனையில் மாணவர்களை வெட்டிய கும்பலை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் முக்கிய குற்றவாளியான கல்லூரி மாணவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case has been registered against 12 people in connection with the incident in which two students were stabbed to death in Tuticorin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->