#BREAKING || கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்... விசாரணை நிறைவு என சிபிசிஐடி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மாணவி பயன்படுத்தி வந்த செல்போன் கடந்த ஜனவரி 20ஆம் தேதி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனை அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

இதனை அடுத்து இந்த வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்து சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை சீலியிடப்பட்ட கவரில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவி பயன்படுத்திய செல்போன் தலையவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

இதனைத் தவிர மற்ற விசாரணை அனைத்தும் நிறைவடைந்துள்ளது. தலையவியல் அறிக்கை கிடைத்ததும் ஒரு மாதத்திற்குள் முழு விசாரணை அறிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து ஜிப்மர் மருத்துவக் குழுவின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை வழங்க கோரி மனுதாரர் ராமலிங்கம் விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID announces kallakurichi student death investigation is over.


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->