பொங்கல் பரிசு தொகுப்பு: இன்றே இறுதி நாள்!
TNGOvt Pongal Gift Package
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்காக ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றனது.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலைகள் 1000 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு 1000 ரூபாய் ரொக்க பணம் தவிர்த்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலைகள் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன.
கடந்த 9 தேதிமுதல் இதுவரை சுமார் 75 சதவீத மக்கள் பரிசுத் தொகுப்புகளை பெற்றுள்ளனர். சிலர் பொங்கலுக்காக சொந்த ஊருக்கு செல்லும் காரணமாக தொகுப்புகளை வாங்கவில்லை.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பை பெற இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் பெறாத பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று உடனடியாக வாங்கிக் கொள்ளலாம்.
English Summary
TNGOvt Pongal Gift Package