மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்.. விசாரணை தொடங்கியது சிபிசிஐடி..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கடந்த மே 13ஆம் தேதி கள்ளச்சாராயம் குறித்து 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று திண்டிவனத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 45 பேர் தற்பொழுது வீடு திரும்பி உள்ளனர். மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கள்ளச்சாராயம் சம்பவத்தில் தொடர்புடைய அமரன், ஆறுமுகம், முத்து, பர்கத்துல்லா, ஏழுமலை, இளையநம்பி, குணசீலன், மண்டங்காட்டு, ரவி, பிரபு உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மதன் என்பவரை தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த மே 15 ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய நிலையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள மதன் உட்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து எக்கியார் குப்பம் கிராமத்தில் வசிப்பவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், புதுச்சேரியில் எத்தனால் விற்பனை செய்த கெமிக்கல் ஆலை உள்ளிட்ட இடங்களில் விசாரணை செய்ய உள்ளனர். 

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். முதற்கட்டமாக மரக்காணம் காவல் நிலையம் மற்றும் எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID police started investigation in Marakanam illicit liquor case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->