இதற்க்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது - வைகோ பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காகவே சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படுகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது. 

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை வஞ்சிக்க கூடாது என்ற முறையில் மத்திய அரசு இந்த அணையை கட்டுவதற்கு அனுமதி தரக்கூடாது. 

மத்திய அரசு இதற்கு முன்னதாகவே அனுமதி வழங்க மாட்டோம் என நீதிமன்றங்களில் தெரிவித்துள்ளது. ஆனால் மார்க்சியஸ் கம்யூனிஸ்ட் தலைமையில் நடைபெறும் கேரள அரசு முல்லை பெரியாறு அணையை உடைத்தே தீருவோம் எனவும் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை காட்டுவோம் எனவும் தெரிவிக்கிறது. 

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை தடுத்து விடலாம் என கேரள அரசு திட்டம் தீட்டுகிறது. இது அநியாயமானது அநீதியானது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt should not give permission build dam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->