தவெக தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு - தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள்.!
central home afairs officers come in chennai for y section security to tvk leader vijay
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்றக் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். கட்சித் தொடங்கியவுடன் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் உள்ள வி. சாலையில் மிக பிரமாண்டமாக நடத்தினார்.
இதைத் தொடர்ந்து விஜய் கட்சியில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு மூன்று கட்டமாக நிர்வாகிகளின் பட்டியலையும் வெளியிட்டார். பின்னர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வருகிற 14-ந்தேதி சென்னை வருகின்றனர்.
பின்னர் அவர்கள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.
English Summary
central home afairs officers come in chennai for y section security to tvk leader vijay