சென்னையை புரட்டி போட்ட "மிக்ஜாம்" புயல்.!! நிவாரணமாக ₹450 கோடி அறிவித்தது மத்திய அரசு.!!
Centralgovt announced 450Crs relief fund for Tamil Nadu
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அதன்படி ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களை பார்வையிட்டனர்.
அதன் பிறகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 450 கோடி ரூபாயை மத்திய அரசு அறிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக முதல்வரை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இடைக்காலம் நிவாரணமாக 5060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது 450 கோடி ரூபாயை மத்திய அரசு அறிவித்துள்ளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Centralgovt announced 450Crs relief fund for Tamil Nadu