பிக் பாஸ் தமிழ் 8-ல் சாச்சனா வெளியேற்றம்?...மரண பயத்தில் போட்டியாளர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவர் இதிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து  நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். கோலாகலமாக நேற்று தொடங்கி ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பல்வேறு போட்டியாளர்களை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வரவேற்று பிக் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே, நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றது . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.  

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா என்பவர்,  பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இந்தநிலையில் பிக் பாஸ் வீட்டின் முதல் நாள் நிகழ்ச்சி முன்னோட்ட ஒளிபரபரப்பில் (ப்ரோமோ) 24 மணி நேரத்திற்குள் போட்டியாளர் ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்ற டாஸ்க் வந்தது.

இதன்படி அதிகம் நாமினேட் செய்யப்பட்டு வீட்டில் இருந்து  சாச்சனா போட்டியாளர் வெளியேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது போன்ற கருத்து தற்போது வைரலாகி வரும் நிலையில் இன்று இரவு நிகழ்ச்சியில் அவை தெரிய வந்து விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chachana eviction in bigg boss tamil 8 contestants in fear of death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->