விழாக்கோலத்தில் திருவாரூர் - களைகட்டும் தேர் திருவிழா.! - Seithipunal
Seithipunal


உலக புகழ்பெற்ற கோவில் தலமான திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேர் மிகவும் பெருமை வாய்ந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை உடைய இந்தத் தேரில் திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

350 டன் எடைக் கொண்ட இந்தத் தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவில் 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் பின்புறம் தள்ள 2 புல்டோசர்கள், 4 வீதிகளில் தேரை திரும்பவும், செலுத்தவும் முட்டுகட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது. இதனுடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். இதற்கு முன்னதாக காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவையொட்டி திருவாரூர் நகராட்சியின் மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள், கழிவறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

charity festival in thiruvarur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->