செங்கல்பட்டு || அரசு மருத்துவமனையில் தீ விபத்து.! தீயில் கருகிய எக்ஸ்ரே எந்திரம் .! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருவது வழக்கமாக உள்ளது. 

இதைத்தொடர்ந்து, சமீப காலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முறையான பராமரிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. 

இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எக்ஸ்ரே வார்டில் இருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறிகொண்டு வெளியேறினர். 

இந்த தீ மிக வேகமாக பரவியதால் உடனடியாக அங்கு இருந்த தீயணைப்பான் மூலம் அந்த தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னர் அருகில் இருந்த செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை விரைந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் எக்ஸ்ரே எந்திரம் தீயில் கருகியது. இந்த விபத்து காரணமாக எக்ஸ்-ரே வார்டு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 

இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், இன்வெர்ட்டர் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chengalpattu govt hospital fire accident x ray mechine damage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->