சோகம்..! டயர் வெடித்து கவிழ்ந்த வேன்! பரிதாபமாக பறிபோன உயிர்... போலீசார் விசாரணை.!
Chengalpattu van overturns accident
செங்கல்பட்டு, கல்பாக்கம் அடுத்துள்ள விட்லாபுரம் பகுதியில் இருந்து குன்றத்தூருக்கு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 20 பேர் வேனில் சென்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் வீடு திரும்பிய போது திருப்போரூர் அடுத்துள்ள தண்டலம் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென வேனின் பின் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வானில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10 க்கும் மேற்பட்டோரை மீட்டு அவசர ஊர்தி மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Chengalpattu van overturns accident