சென்னையில் பழங்கால சிலைகள், உலோக உடைவாள் பறிமுதல்! வசமாக சிக்கிய 4 பேர்! - Seithipunal
Seithipunal


சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாறு சாஸ்திரி நகரில் சுமதி என்பவர் வீட்டிலிருந்து  2 பழங்கால சிலைகள், நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் உள்ளிட்டவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுமதி என்பவர் வீட்டில் இருந்து தான் இந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சுமதியை கைது செய்த போலீசார், அவரது கணவர் பிரகாஷ் சிலை கடத்தல் தொடர்பாக எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால் சிலைகளை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த சிலை கடத்தல் வழக்கில் தங்கராஜ் மற்றும் ராஜேஷ் கண்ணன் என்ற இருவரையும் போலீசார் கைது செய்துள்ளார்.

சிலைகள் கோயிலில் இருந்து திருடப்பட்டதாகவும், விற்க காத்திருந்த போது போலீசாரல் கைது செய்யப்பட்டதாகவும் சுமதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்டன, யாரிடம் விற்பனை செய்ய இருந்தார்கள்  என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Adayar Temple Idol Rescue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->