சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு! விடுக்கப்பட்ட மிரட்டல், தீவிர சோதனை!
Chennai Airport
இன்று அதிகாலை, 237 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்துகொண்டிருந்த ஒரு சர்வதேச விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியது.
உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் தீவிர சோதனை நடத்தப்பட்டதில், எந்தவிதமான வெடிபொருள்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானத்தில் வந்த அனைத்து பயணிகளின் உடமைகளும் கவனமாக பரிசோதிக்கப்பட்டன. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.