சென்னை : வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பழங்கால மாரியம்மன், நடராஜர் சிலை - விசாரணையில் வெளியான உண்மை.! - Seithipunal
Seithipunal


சென்னை : அண்ணா நகரின் ஒரு வீட்டில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான, பல கோடி ரூபாய் மதிப்பு மதிப்புடைய நடராஜர் மற்றும் மாரியம்மன் உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

அண்ணா நகர் 5வது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நடராஜர்  சிலையும், அமர்ந்த நிலையில் இருக்கும் மாரியம்மன் உலோக சிலைகள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்களின் பெற்றோர்கள் காலத்திலிருந்தே, இந்த சிலைகள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சிலைகள் எங்கிருந்து அவர்களுக்கு கிடைத்தது என்ற ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

முதல் கட்ட விசாரணையின் படி, இந்த சிலைகள் இரண்டும் கோவில் உற்சவர் சிலைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிலைகளை கைப்பற்றிய போலீசார், தொல்லியல் துறை நிபுணர் மூலம் ஆய்வு செய்ததில், இந்த சிலைகள் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், இது பல கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai anna nagar home god statue found


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->