சென்னை : அண்ணா நகர் டவர் பூங்கா 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறப்பு.!
Chennai Anna Nagar tower park tomorrow open
சென்னை அண்ணா நகரின் முக்கிய அடையாளமாக திகழும் அண்ணா நகர் டவர் பூங்கா மீது பொதுமக்கள் ஏறி சென்னை மாநகரை ரசித்து வந்தனர். சென்னையில் பொது மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இந்த அண்ணா நகர் டவர் பூங்கா உள்ளது.
இந்த நிலையில் காதல் தோல்வி அடைந்த சில காதலர்கள் தவறில் ஏறி கீழே குறித்து தற்கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்தது. இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கோபுரத்தின் மேல் ஏறி செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி பன்னிரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் கோபுரத்தின் மேலே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் பூங்காவுக்கு வரும் மக்கள் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரம் மற்றும் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுரம் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வந்தது. மேலும் கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோபுரத்தின் மேலே ஏறி செல்லும்போது கீழே தடுமாறி விழாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் கோபுரத்தின் தடுப்பு சுவர் மற்றும் தூண்களில் தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்புக்கும் வழியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போதைய அண்ணா நகர் டவர் பூங்கா கோபுரம் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நாளை இந்த கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.
English Summary
Chennai Anna Nagar tower park tomorrow open