அண்ணாநகர் சிறுமி வழக்கு! சிபிஐ விசாரணைக்கு தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு!
Chennai Annanagar Child Abuse case
கடந்த 30.08.2024 ம் தேதி பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையால் சிறுமியின் தாயார் ஒருவர் W-7 அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வரப்பட்டது.
புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் தாயார் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றமும் 24.09.2024 ம் தேதி தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இவ்வழக்கு 01.10.2024 ம் தேதி விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர் நீதிமன்றம் அமர்வு இவ்வழக்கை மத்திய புலனாய்வு துறை (CBI) விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் சார்பாக இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்ற நீதியரசர் சூர்யகாந்த் வழக்கின் வாதங்களை கேட்டறிந்த பின் இன்று 11.11.2024 ம் தேதி மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு தடை ஆணை பிறப்பித்தார்.
தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யலாம் என்றும், அதற்கு தமிழ்நாட்டில் பணிபுரியும் வேறு மாநில இந்திய காவல் பணி அதிகாரிகள் 7 பேர் பட்டியலை அவர்களை பற்றிய சுருக்கமான விபரங்களுடன் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Chennai Annanagar Child Abuse case