தஞ்சாவூர் || மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம் - 3 ஆசிரியைகள் பணியிடமாற்றம்.!
three teachers transfer for paste student mouth cello tape issue
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி தொடக்கப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் வாயில் தலைமை ஆசிரியை டேப் ஒட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து ஆட்சியர் விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த விசாரணையில் வகுப்பு ஆசிரியை சிறிது நேரம் ஒரு மாணவனை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு மற்றொரு வகுப்பறைக்கு செல்லும்போது மாணவர்களே வாயில் டேப் ஒட்டியதாகவும், அதனை மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து பரப்பியதாகவும் தெரியவந்தது.
ஆனால் இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தலைமை ஆசிரியை தெரிவித்தார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அய்யம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் பெல்சி சுமாகுலேட் பெர்சி, முருகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து வட்டார கல்வி அலுவலர் இன்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three teachers transfer for paste student mouth cello tape issue