சென்னை பாரிமுனையில் பயங்கரம்!....பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Chennai at parrys corner terrible 3 people admitted to hospital in an accident where an old building collapsed
சென்னையில் 60 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்தில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை பாரிமுனை சென்னையின் பிரதான முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. இந்த சூழலில் பாரி முனையில் பயன்பாட்டில் இல்லாத பல் மருத்துவமனையின் ஆண்களுக்கான விடுதி கட்டிடம் செயல்பட்டு வந்தது.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் செயல்பட்டு வந்த இந்த பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் சாலை ஓரம் நடந்து சென்றவர் மற்றும் அருகே நின்று இருந்தவர் உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இதன் காரணமாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Chennai at parrys corner terrible 3 people admitted to hospital in an accident where an old building collapsed