45-வது சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்.!
chennai book fair 2022
சென்னையில் ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகக் கண்காட்சி கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் காரணமாக புத்தகக் கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இன்று தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை 45-வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சியை இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
45-வது சென்னை புத்தக காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று முதல் நடைபெறுகிறது. மேலும், தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.