சென்னையில் பள்ளி மாணவர்கள் அராஜகம்! கண்டுகொள்ள காவல்துறை - மக்கள் வேதனை! - Seithipunal
Seithipunal


சென்னையில் மாநகர அரசு பேருந்தின் மேற்கூரை மீது ஏறி, பள்ளி மாணவர்கள் அராஜகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் செல்லும் அரசுப்பேருந்து மீது ஏறிய பள்ளி மாணவர்கள் கத்தி கூச்சலிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் ரீல்ஸாக பதிவேற்றிய மாணவர்கள், நாங்கதான் கெத்து என்று பயமறியாமல் இதனை செய்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் இந்த அராஜகத்தை போலீசார் கண்டு கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும், குறிப்பாக மாணவர்கள் தவறு செய்தால் போலீசார் மூலம் சிறு தண்டனைகள் வழங்க வேண்டும் என்றும் சமூக ஆரவாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாணவர்களின் ஒழுக்கத்தை பேணிக்காக்க, பள்ளி வளாக தூய்மை, மனப்பாட பாடல் ஒப்புவித்தல், போக்குவரத்து சீர் செய்யும் பணி, ஒழுக்க வகுப்புகள் போன்றவற்றை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாதம் ஒருமுறை காவல்துறை தரப்பில் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்றும்  சமூக ஆரவாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai BUS  School Students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->