கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: சென்னையில் 8000 போலீசார் பாதுகாப்பு!
Chennai Christmas festival 8000 police security
சென்னையில் வருகின்ற 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நாளை இரவு முதல் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதவி ஆணையர் தலைமையில் துணை ஆணையர்கள் மேற்பார்வையில் 8000 போலீசார் விரிவான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு உதவியாக ஊர்காவல் படையினரும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடும் போது சாதாரண உடைகளில் கண்காணித்து திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Christmas festival 8000 police security