சென்னை மக்களுக்கு சூப்பர் செய்தி! மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம் அமல்!
Chennai Corporation Chennai Rains Floods
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக நீர்வளத்துறை வசமிருந்த வேளச்சேரி வீராங்கல் ஓடை மற்றும் விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
6.5 கி.மீ நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாயில், குறுகிய பாலங்கள் காரணமாக 1700 கன அடி நீர் செல்ல வேண்டிய இடத்தில் 800 கன அடி மட்டுமே செல்ல முடிகிறது. இதற்காக 12 குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
வடபழனி 100 அடி சாலையிலும் இதே காரணமாக ஒவ்வொரு மழையிலும் தண்ணீர் தேங்குகிறது. இதற்கான தீர்வாக அங்கு உள்ள குறுகிய பாலங்களையும் உயர்த்திக் கட்ட திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் 2025 பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) தகவல் தெரிவித்தார். இதனால், சுமார் 25 லட்சம் மக்கள் மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பு பெறுவர்.
மேலும், வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கான தீர்வாக 2.78 கி.மீ தூரத்திற்கு வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவர் உயர்த்தப்படும். இதன் மூலம், தற்போது ஓடையில் செல்லும் தண்ணீரின் அளவை விட 25% அதிகமாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்படும்.
English Summary
Chennai Corporation Chennai Rains Floods