மயிலாப்பூரில் விதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி உறுதி!
Chennai Corporation Chennaigh Court Mylapur
சென்னை: மயிலாப்பூர், அபிராமபுரம் செயின்ட் மேரீஸ் சாலையில் கட்டுமான விதிகளை மீறி சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட கட்டிடங்கள், அதில் தேவாலயம் உள்ளிட்டவை, விரைவில் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இந்த கட்டிடங்கள் சட்டமுறையற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததது. இதுகுறித்து வழக்கு ஒன்றும் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், சென்னை மாநகராட்சிக்கு 3 மாதங்களில் அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களையும் அகற்றச் செயல் திட்டம் வகுத்து, அதற்கான முழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், மயிலாப்பூரில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள், அரசின் கட்டுமான விதிகளுக்கு எதிராக எழுப்பப்பட்டதாகக் கருதப்படும் அனைத்து சொத்துக்களும் அகற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள், இந்த வழக்கின் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, விதிமீறி கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் அடையாளம் கண்டறிந்து அவற்றை இடிக்க நடவடிக்கை எடுப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Chennai Corporation Chennaigh Court Mylapur