தியானத்திற்கு சென்ற சென்னை பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை: போதகர் மீது வழக்கு!
Chennai girl came meditate pastor against case
சென்னை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சென்னையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன அழுத்தத்தில் இருந்த ஆசிரியை புதுக்கோட்டை, மங்களகிரி விலக்கில் உள்ள ஒரு தியான இல்லத்திற்கு சென்று போதகர் மைக் மகிலன் என்பவரிடம் முறையிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் மற்றொரு போதகரை பெண்ணிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த போதகர் ஆசை வார்த்தைகளை தெரிவித்து இளம் பெண்ணே பாலியல் வன்கொடுமை செய்து தொழில் செய்ய வேண்டும் என தெரிவித்து அந்த பெண்ணிடம் இருந்து ரூ. 5 லட்சம் வரை பெற்றுள்ளார்.
இதற்கிடையே அந்த பெண் போதகரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இது குறித்து போதகர் மகிலனிடம் அந்த பெண் முறையிட்டபோது அவரும் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி இது தொடர்பாக அந்தப் பெண் நேரடியாக ஆலயத்திற்கு சென்று இருவரிடமும் கேட்டபோது அந்தப் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர் அந்த பெண் தூத்துக்குடி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி அலுவலகத்தில் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தனது பணத்தை மீட்டு தரக் கோரியும் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 417, 420, 506 மற்றும் பெண்களை கொடுமைப்படுத்துதல் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Chennai girl came meditate pastor against case