தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு பச்சோந்தி - கிழித்தெடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சியாளர்களுக்கு ஏற்ப பச்சோந்தியாக மாறுகிறது என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார.

ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம், இந்த இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தான் பார்த்த வழக்குகளில் மிக மோசமாக விசாரணை செய்யப்பட்ட வழக்கு இதுதான் என்று தெரிவித்தார். 

மேலும், வழக்கு விசாரணையில் நீதிபதி தெரிவிக்கையில், "எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அவர்களுக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்ட நோக்கம் அழிந்து, தற்போதைய இந்த துறை பச்சோந்தி துறையாக மாறி உள்ளது. 

சட்டம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கருக்கு பொருந்தாது என்று அறிவித்து விடலாம். எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளில் சரியாக விசாரணை செய்யவில்லை.

லஞ்ச ஒழிப்புத்துறை ஆளும் அரசிடமிருந்து விலகி செயல்பட வேண்டும். இது போன்ற நிலை தொடர்ந்தால், புற்றுநோய் போல் இந்த சமுதாயத்தை சிதைத்து விடும்.

ஓபிஎஸ் வழக்கில் விசாரணை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யாமல், அரசிடம் தாக்கல் செய்து உள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.

அதனை நீதிபதி போல சபாநாயகர் நடவடிக்கை எடுத்து உள்ளார். 374 சதவீதம் வருமானத்திற்காக சொத்து சேர்த்த வழக்கில், போதுமான ஆதாரங்கள் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை கூறியுள்ளது.

குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலி குத்தாகிவிட்டது. வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Anand Vengadesh slap vigilance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->