நித்தியானந்தா எங்கே? நேரில் ஆஜராக செல்லுங்க! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆவேசம்! - Seithipunal
Seithipunal


நித்தியானந்தா தமிழகத்தில் இருந்த போது, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நான்கு மடங்களின் மடாதிபதியாக அவரை நியமித்து மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்திருந்தார். 

இதனை எதிர்த்து பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த நான்கு மடங்களுக்கும் தக்காரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, நித்தியானந்தா இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு நித்தியானந்த தரப்பில், அவர் இந்தியாவில் இல்லை, அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளியும் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது. 

அதற்கு நீதிபதி தண்டபாணி அவர்கள், நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தெரிய வேண்டும். இல்லை என்றால் அவரை காணொளி வாயிலாக ஆஜராக சொல்லுங்கள் என்று தெரிவித்தார். 

இதற்கு மனுதாரர் தரப்பில் , ஆஜர்படுத்த முடியாது என்று மறுப்பு தெரிவிக்கவே, இந்து சமய அறநிலைத்துறையின் உத்தரவில் தலையிட முடியாது என்று, நித்தியானந்தர் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார். 

மேலும் இந்த வழக்கில், நித்தியானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானது. குறிப்பாக அவரின் கதவை திற காற்று வரட்டும் என்ற தலைப்பில் வெளியான தொடர் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளது. காஞ்சி பெரியவர் சொன்னது போல ஒரு சன்னியாசி எப்போதும் சந்நியாசியாகவே இருக்க வேண்டும் என்று நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Nithyananda case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->