சாதிப்பெயரில் பள்ளி, கல்லூரிகள் இயங்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
chennai high court order change run cast name school and colleges
தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாமல், தனியாரால் ஏராளமான பள்ளி – கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சில கல்வி நிலையங்கள் சாதிப் பெயர்களை கொண்டு இயங்கி வருகிறது. அதிலும், குறிப்பாக பள்ளி, கல்லூரியை தொடங்கியவர் பெயரை வைக்கும்போது பின்தொடர்ந்து அவரது சாதிப் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதேபோல் சாதிகள் பெயரில் சங்கங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்டவையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக் கொள்ள சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
-lv5ph.jpg)
இந்த வழக்கு விசாரணையின் போது, “சாதிகளின் பெயரில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்; ஏற்கனவே உள்ள சங்கங்கள் சாதிப்பெயரை நீக்கி திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; இல்லையெனில் அவை சட்டவிரோதமானவை என்று அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண்டும்” என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப் பெயரை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகளின் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர்கள் இடம்பெறலாம். ஆனால், அவர்களின் பெயரில் சாதிப்பெயர் இருக்கக் கூடாது.அரசு நடத்தும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி, கள்ளர் பள்ளி போன்றவற்றில் உள்ள பெயர்களை மாற்றி அரசுப்பள்ளி என்றே பெயரிட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
English Summary
chennai high court order change run cast name school and colleges