சென்னை : லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் மூடப்படுமா? - உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு.!
chennai high court order to close fish shops in loop road
சென்னை : லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் மூடப்படுமா? - உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு.!
சென்னையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதியில் உள்ள மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதுகுறித்து தாக்கல் செய்த மனுவில், "மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை கோரியுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லூப் சாலையின் கிழக்கு பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சாலை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றுத் தெரிவித்தனர். அதன் பின்னர், இந்த வழக்கை நாளை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
English Summary
chennai high court order to close fish shops in loop road