3 மாதத்தில் மதுபானக் கடையை மூட வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடச்சபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்ததார். அந்த மனுவில் சாத்தான்குளம் தாலுகாவில் முதலூர் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் மற்றும் அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு உள்ளாக மதுபானக் கடை அமைக்கப்பட்டது. 

இந்தக் கடையை அகற்றுமாறு ஊராட்சிமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில், ஏற்கனவே கடை அமைந்த இடத்திற்கு எதிரே கடை திறந்துள்ளனர். 

இருப்பினும், வழிபாட்டுத் தலங்களில் இருந்து நூறு மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடைகளை அமைப்பது சட்டவிரோதமானது. ஆகவே, தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்,” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை வைப்பதற்காக தேர்வு செய்யப்படுவது ஏன்? என்றுக் கேள்வி எழுப்பினர். மேலும் மூன்று மாதங்களுக்குள்ளாக மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court order to tn govt of tasmac close withun three months in thoothukudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->