திருப்பதி கோவிலுக்கு ரூ.1.2 கோடி நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி.!
chennai islam couples giver 12 million to thirupathi devasthanam temple
சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1.2 கோடி நன்கொடை வழங்கியுள்ளது தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த அப்துல் கனி, சுபினாபானு என்ற தம்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.2 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இன்று அதிகாலை திருப்பதி கோவிலில் ஏழுமலையான் சுவாமியை வழிபட்ட பின்னர், கோவிலில் இருக்கும் ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரியான தர்மா ரெட்டியிடம் அந்த தம்பதிகள் கொண்டு வந்த ரூ.1.2 கோடி ரூபாய்க்கான வரைவோலையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அவர்கள் கொடுத்த மொத்த தொகையில் ரூ.15 லட்சத்தை அன்னதான அறக்கட்டளை மற்றும் ரூ.87 லட்சத்தை திருப்பதி ஏழுமலையில் இருக்கும் பத்மாவதி விருந்தினர்கள் மாளிகையில் நடைபெற்று வருகின்ற புதுப்பித்தல் பணிக்கு பயன்படுத்திக் கொள்ள அவர்கள் நிர்வாக அதிகாரியான தர்மரா ரெட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
chennai islam couples giver 12 million to thirupathi devasthanam temple