#சென்னை | கேந்திர வித்யாலயா பள்ளி மாணவன் நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை - மருத்துவமனையில் சிகிச்சை!
Chennai Kendriya Vidyalaya School Student Ragging
சென்னை : அசோக் நகர் டாக்டர் நடேசன் சாலையில் மத்திய அரசின் பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய 15 வயது மாணவன் ஒருவருக்கு, அதே பள்ளியில் பயின்று வரக்கூடிய 12 மாணவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் அந்த 12 மாணவர்கள் சேர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த மாணவனை நிர்வாணப்படுத்தி கொடூரமாக ராகிங் செய்துள்ளனர். இதனால் அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை அளித்த தகவலின் படி, காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவனிடமும், மாணவனின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவன் அளித்த புகார் அடிப்படையில், கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் மற்றும் அந்த வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் ஒரு மணி நேரத்தில் மேலாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 12 மாணவர்களின் பெயரையும் பாதிக்கப்பட்ட மாணவன் குறிப்பிட்டுள்ளதால், போலீசார் அந்த மாணவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
English Summary
Chennai Kendriya Vidyalaya School Student Ragging