கொடூரம் | மக்களே உஷார் - சென்னையில் அடுத்தடுத்து பலியான கணவன்-மனைவி!
Chennai Kodampakkam Husband and wife death in power shock
சென்னை கோடம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் கதவில் மின் கசிவு ஏற்பட்டு, கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியாகிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ரத்தினாம்பாள் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஆறு வீடுகள் உள்ளன. தரைதளத்தில் உள்ள வீட்டில் 78 வயதான மூர்த்தி மற்றும் அவரது மனைவி பானுமதி ஆகியோர் வசித்து வந்தனர்.
தம்பதிகள் மூர்த்தி-பானுமதி இருவருமே அரசு அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புற இரும்பு கதவை மூடுவதற்காக மூர்த்தி சென்றுள்ளார்.
கேட் மீது பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு செல்லும் வயர் அறுந்து, கேட் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாமல் தொட்ட மூர்த்தி சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியானார்.
கணவன் சென்று வெகு நேரமாகியும் வராததால், வந்து பார்த்த மனைவி, கணவர் மூர்த்தி கேட்டில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரை காப்பாற்றுவதற்காக சென்றார்.
அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் கேட்டிலேயே உயிரிழந்து கிடந்த நிலையில், எதிர் வீட்டுக்காரர் மின்சார துறை மற்றும் தீயணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மின்சார துறையினர் சம்பவத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்து, கணவன்-மனைவி இருவரின் உடலையும் விட்டு மருத்துவமனைக்காக எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Chennai Kodampakkam Husband and wife death in power shock