சென்னையில் கடந்த ஒரு ஆண்டு 94 கொலைகள், 424 பேர் குண்டர் சட்டத்தில் கைது - போலீசாரின் புள்ளி விவரம்!
chennai Murder Robbery
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, சென்னையில் 2021ம் ஆண்டில் 93 கொலைகளும், 2022ம் ஆண்டில் 94 கொலைகளும் நடைபெற்றுள்ளன.
* கடந்த ஆண்டு 94 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 4 ஆதாயக் கொலைகளும், 11 கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன.
* 230 வழிப்பறி, 35 கொடுங்களவு, 503 சாதாரண களவு ஆகியவையும் நடைபெற்றுள்ளன.
* கடந்த மே மாதம் முதல் நடத்தப்பட்ட வேட்டையில், 547 சரித்திரப் பதிவேடுகள் புதிதாக துவக்கப்பட்டு, மொத்தம் 3610 சரித்திரப் பதிவேடுகள் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகின்றன.
* வீட்டை உடைத்து திருடுபவர்கள் மற்றும் வாகன திருடர்கள் உள்ளிட்ட 5636 குற்றவாளிகள் (165 நபர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர்.
* ரவுடிகள் வேட்டையில் சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி, எண்ணூர் தனசேகரன், ஆற்காடு சுரேஷ், பி.டி.ரமேஷ் உள்ளிட்ட 74 கொடுங் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
* குண்டர் சட்டத்தில் 2020 -ல் 334 நபர்கள், 2021-ல் 270 நபர்கள், 2022ம் ஆண்டு, ரவுடிகள் உட்பட 424 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.