சென்னை || விசாரணை கைதி மர்ம மரணம்? - போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal



சென்னை புரசைவாக்கத்தில் நேற்று இரவு வாகன தணிக்கையில் போது பிடிபட்ட ரமேஷ், விக்னேஷ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இருவரிடம் இருந்து இரண்டு கஞ்சா போட்டாலும், பட்டாக்கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் திடீரென விக்னேஷுக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட விக்னேஷ் வலிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

விக்னேஷின் சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ், பட்டினம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்திவந்த நிலையில். பட்டினம்பாக்கம் விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai Mysterious death of trial prisoner


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->