நீல நிற பேருந்து! சிசிடிவி கேமரா, சார்ஜிங் வசதி, மாற்று திறனாளிகளுக்கான பிரத்யேக இருக்கை - தொடங்கி வைத்த உதயநிதி!  - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 88 புதிய தாழ்தள பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீல நிறத்தில் உள்ள இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு சிறப்பு படிகள் அமைக்கப்பட்டுள்ளது.

நீல நிறத்தில் விடப்பட்டு உள்ள இந்த பேருந்துகளில் தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் ஏறுவதற்கு சிறப்பு சாய் தளம், சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய தாழ்தள பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலை வகித்தார்.

மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன் மற்றும் அதிகாரிகள் புதிய பேருந்தில் ஏறி சிறிது தூரம் வரை பயணம் செய்தனர். 

பிராட்வே, கிளாம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, திருப்போரூர், திருவொற்றியூர், திருவேற்காடு, தி.நகர், மகாபலிபுரம், திருவான்மியூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, கோவளம் உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai New Bus Udhaynidhistalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->