அடுத்த அதிர்ச்சி! சென்னையில் மீண்டும் ஒரு மருத்துவர் மீது தாக்குதல்!  - Seithipunal
Seithipunal


சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் ஹரிகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணியாற்றி வரும் ஹரிஹரன் மீது, ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாக்குதல் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், காயமடைந்த மருத்துவர் ஹரிகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை கிண்டி அரசு மருத்துவர் மீது நோயாளியின் உறவினர் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் மீண்டும் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai one more doctor Attacked in duty


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->