3000 போதை மாத்திரை, ஊசிகள் - சென்னையை அதிர வைத்த 5 இளைஞர்கள்!
chennai Police Arrest Drugs smuggling near pallikaranai
சென்னை : போதை மாத்திரை மற்றும் ஊசிகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை, மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னையில் 3000 போதை மாத்திரை மற்றும் ஊசிகளுடன் ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பள்ளிக்கரணை அருகே தனியார் கல்லூரி எதிர்ப்புறத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஐந்து இளைஞர்கள் ஒன்றாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார், இந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த ஐந்து இளைஞர்கள் சுமார் 3000 போதை மாத்திரைகள், அதற்கான ஊசிகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை எடுத்த அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இளைஞர்களிடம் விசாரணை செய்ததில், இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிவிவந்தது.
மேலும் இந்த போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் அவர்கள் வாங்கியதும் தெரிய வந்தது. இந்த போதை மாத்திரைகள் குறித்து போலீசார் மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
chennai Police Arrest Drugs smuggling near pallikaranai