கன்னியாகுமாரியைத் தாண்டி செல்லாத வண்டிக்கு அபராதம் விதித்த சென்னை போலீஸ்.! நடந்தது என்ன?
chennai police fined to kanniyakumari two whealer
கன்னியாகுமாரியைத் தாண்டி செல்லாத வண்டிக்கு அபராதம் விதித்த சென்னை போலீஸ்.! நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜிகுமார். கட்டிட ஒப்பந்ததாரராக இருக்கும் இவருடைய செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ஒரு இணைப்பு லிங்கும் வந்துள்ளது.
இந்த லிங்கை அவர் க்ளிக் செய்து பார்த்தபோது சென்னை போக்குவரத்துக் காவல் துறையின் அபராத ரசீது இருந்தது. அந்த ரசீதில் ஒரு வழிப்பாதை மற்றும், தவறான பக்கத்தில் ஓட்டுதல் உள்ளிட்ட தவறுகளுக்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த ரசீதில் அவரது பைக் என்று ஒரு பெரிய ரக பைக் ஒன்றும் இருந்தது. வண்டி எண், குறுந்தகவல் வந்த செல்போன் எண் ஆகியவை மட்டுமே அஜிகுமாருடையதாக இருந்தது. இதைப் பார்த்து அஜிகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது “என் ஸ்கூட்டியை நான் கன்னியகுமாரியைத் தாண்டி எங்கேயும் கொண்டு சென்றது இல்லை. ஆனால், சென்னை போக்குவரத்துப் போலீஸார் அபராதம் போட்டு அனுப்பியிருக்கும் ரசீதில் என் வாகன எண் சரியாக உள்ளது.
ஒரு வேளை அது போலி வாகன எண் கொண்டு ஓட்டப்படும் இருசக்கர வாகனமா என்பது குறித்து எஸ்.பியை சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன் ”என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
chennai police fined to kanniyakumari two whealer