கள்ளச் சாராயம், கஞ்சா விற்பனை | பொது மக்களின் உதவியை நாடும் சென்னை போலீஸ்! - Seithipunal
Seithipunal


சென்னையில் கள்ளச் சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் செல்போன் மூலம் தகவல் அளிக்கலாம் என்றும் தங்களின் ரகசியம் பாதிக்கப்படும் என்றும், சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து, கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்டும், வாட்ஸ் அப் (Whats app) மூலமாகவும் மற்றும் குறுஞ்செய்தி (SMS) வயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகரில் ஆங்காங்கே போலீசார் சார்பாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் கொடுக்கும் பொதுமக்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.

பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :

பூக்கடை, வண்ணாரப் பேட்டை, புளியந்தோப்பு காவல் மாவட்டங்கள் - 80728 64204.

அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்கள் - 90423-80581.

அடையார், புனித தோமையர் மலை தி.நகர் காவல் மாவட்டங்கள் - 90424-75097.

திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மைலாப்பூர் காவல் மாவட்டங்கள் - 63823-18480.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police Request to Public for kallasarayam and ganja issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->