கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! அரசு மருத்துவமனை தான் காரணமா?! - Seithipunal
Seithipunal


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்த  ஒன்றரை வயது குழந்தை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

உயிரிழந்த இந்த குழந்தை ரத்த உரைதல் காரணமாக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், கடந்த மாதம் இரண்டாம் தேதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். 

மேலும் குழந்தையின் வலது கை அழுகிப்போனதால், அந்த கை அகற்றப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், குழந்தை இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த குழந்தையின் கை அகற்றப்பட்ட போதே, குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தனர்.

இதற்கு அரசு மருத்துவமனை, தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்த குழு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது உறுதியாகியதாகும், மருந்து கசிவால் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குழந்தையின் உயிரை காப்பாற்றும் நோக்கத்திலேயே குழந்தையின் வலது கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தன்னுடைய குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை தான் காரணம் என்று, குழந்தையின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai rajiv Govt Hospital Child death case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->