சென்னை வாகன ஓட்டிகளே அடுத்த ஆப்பு! இந்த சாலை விதியை மறந்து விடாதீங்க! எச்சரிக்கும் காவல்துறை! - Seithipunal
Seithipunal


சென்னை சாலை சிக்னல்களில், பொதுமக்கள் சாலையை கடக்க உதவும் சிப்ரா (வெள்ளைக் கோட்டினை) கோட்டினை தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக, 3702 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும். போக்குவரத்தை திறம்பட மேம்படுத்தி ஒழுங்குபடுத்தவும் இடைவிடாத முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும். பல்வேறு அணுகுமுறைகளுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

இருப்பினும், சிக்னல் மீறுபவர்கள், திருப்பம் இல்லாத இடத்தில் திரும்புதல், நிறுத்தல் கோட்டை மீறி நிறுத்துபவர்கள். இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் சவரி செய்தல் போன்ற விதிமீறல்களின் விகிதம், பல போக்குவரத்து சந்திப்புகளில் அதிகரித்து வருகிறது. 

இதுபோன்ற விதிமீறல்களினால் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுப்பது மட்டுமின்றி மற்ற சாலைப் பயனாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நேற்று (பிப்.27) சென்னை பெருநகரின் 150 முக்கிய போக்குவரத்துச் சந்திப்புகளில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இச்சந்திப்புகளில் ஒலிப்பெருக்கி மூலம் போக்குவரத்து விதிமீறுபவர்களை எச்சரிக்கப்பட்டு அவர்களின் விதிமீறல்களின் தன்மையை மேற்கோள் காட்டப்பட்டன. 

இதுபோன்று வாகன நிறுத்த கோட்டினை தாண்டி நிறுத்தப்பட்ட வாகனங்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த தொடர் நடவடிக்கையால் சென்னை பெருநகரில் 3702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai signal Road crossing rule fine


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->