சென்னை புறநகர் ரெயில் சேவை பாதிப்பு...பணிகள் கடும் அவதி!
Chennai suburban train services affected Hard work!
சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ரெயில்கள் இன்று காலை 9.50 மணி முதல் மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:சென்னை புறநகர் ரெயில் சேவை இன்றும் நாளையும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது . அதன்படி இன்று சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
மேலும் சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ரெயில்கள் இன்று காலை 9.50 மணி முதல் மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதையடுத்து ரெயில்கள் ரத்து செய்யப்படுவதை அடுத்து சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் கணிசமான அளவில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை திங்கட்கிழமை காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 9.55, 11.25, மதியம் 12.00, 1.00, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ர ரெயில் நிலையம் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
இதே போல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து நாளை காலை 11.45, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
இதேபோல் செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
English Summary
Chennai suburban train services affected Hard work!