கொரோனா கால கொடூரம்.. சிறுமியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்... 2 ஆண்டுகளுக்குப் பின் கைது..!! - Seithipunal
Seithipunal


சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் "எனது மகள் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கின் பொழுது ஆபாச வீடியோக்களை வாலிபர் ஒருவர் காட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி எனது மகளை நிர்வாணப்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி வந்துள்ளார். அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அந்த வாலிபர் செல்போனில் பஜ்ஜி விளையாட சொல்லிக் கொடுப்பதாக பாலியல் தொந்தரவு செய்து நிர்வாண வீடியோ எடுத்தது தெரியவந்தது.

இந்த விசாரணை தொடர்பான அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai teenager sexually harassed a girl was arrested after 2years


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->