திமுக அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீச்சு! பிடிபட்டவர் சொன்ன அதிர்ச்சி செய்தி!
Chennai Teynampet DMK Anna Arivalayam attacked in Beer
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பீர் பாட்டிலை வீசியவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பீர் பாட்டிலை வீசியவர் அதிமுக முன்னாள் நிர்வாகி என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், பீர் பாட்டிலை வீசியவர் அதிமுக முன்னாள் நிர்வாகியை பிடித்து சென்னை தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் நிர்வாகி கோவரதனை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே வெளியான தகவலின் படி, கண்ணகி நகரை சேர்ந்தவர் கோவர்தன் என்பதும், அவர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்து மது பாட்டிலை வீசி உள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், மதுவினால் தனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதாகவும், மதுவினால் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்றும் கோவர்தன் கோஷமிட்டுக்கொண்டே இருந்தார்.
English Summary
Chennai Teynampet DMK Anna Arivalayam attacked in Beer