சென்னை பீச் to தி.மலைக்கு.. வெறும் ரூ.50-ல் எப்படி.? குஷியில் பயணிகள்.!!
Chennai to thiruvannamalai train service in rs50
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையிலிருந்து தலைநகர் சென்னை இடையே ரூ.50 கட்டணத்தில் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர் .
வட மாநிலங்களையும் தென் மாவட்டங்களை இணைக்கும் நகரமாக திருவண்ணாமலை இருப்பதால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்த நிலையில் தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் விரைவில் காலை 9 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்து அடையும். அதேபோன்று மறு மார்க்கத்தில் மாலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடையும். இந்த ரயில் ஆனது சென்னை கடற்கரையில் இரந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai to thiruvannamalai train service in rs50