வாகன ஓட்டிகளே.! ஆக.15ல் சென்னை போக்குவரத்தில் அதிரடி மாற்றம்.!! ஒத்துழைப்பு நல்குக.!! - Seithipunal
Seithipunal


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோட்டையில் தேசிய கொடியை ஏற்ற உள்ளதால் அன்று காலை 6:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் "நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமைந்துள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்தியன் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலை, கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்துக்கும் தடை செய்யப்படுகிறது.

காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி விவேகானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையும்.

பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்கசாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, இ.வி.ஆர் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையும்.

அண்ணா சாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், என்.எஃப்.எஸ் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையும்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai traffic changes on 15th August


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->