312 இடங்களில் சோதனை., நாளை முதல் சென்னை வாசிகளே உஷார்.!
Chennai Traffic police Alert for Helmet Issue May 2022
இரு சக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்பவருக்கும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று, சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் 01.01.2022 முதல் 15.05.2022 வரையிலான காலப்பகுதியில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் மற்றும் 18 பேர் பின்னிருக்கை இருந்தவர்கள் உயிரிழந்தனர் . 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.
எனவே, விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், நாளை முதல் (23.05.2022 திங்கட்கிழமை) சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்கவும், விபத்தில்லா நகரை உருவாக்கவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெளியான ஒரு தகவலின்படி, சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் நாளை முதல் அதிரடி வாகன சோதனை நடத்தப்படும் என்றும், அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளே ஹெல்மெட் அணிந்து இனி பயணம் செய்யுங்கள், காவல்துறைக்கு பயந்து அல்ல, உங்கள் விலைமதிப்பற்ற உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து.
English Summary
Chennai Traffic police Alert for Helmet Issue May 2022