தவறான பாதை | சென்னை வாகன ஓட்டிகளே உஷார்! ஒரே நாளில் சிக்கிய 2500 பேர் மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


சென்னையில் தவறான பாதையில் வாகனம் ஒட்டியதற்காக நேற்று ஒரு நாளில் மட்டும் 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 763 வழக்குகளுக்கு அபராத தொகையாக ரூ.3,81,500 வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது கவனிக்கப்பட்டது. இந்த விதி மீறல்களை கட்டுப்படுத்த நேற்று (30.01.2023) சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. 

இந்த தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 763 வழக்குகளுக்கு அபராத தொகை ரூ.3,81,500 வசூலிக்கப்பட்டது.

இந்த தணிக்கை மேலும் தொடரும் என்றும், இது சம்பந்தமாக அனைத்து வாகன ஓட்டிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Trafic police warn for wrong root drive


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->