சென்னை விசாரணை கைதி கொலை வழக்கு..6 காவலர்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் போலீஸ் கஸ்டடியில் இருந்த விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்.

விக்னேஷின் மரணத்துக்கு அரசியல் கட்சிகளும் நீதி கேட்டு கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக இந்த பிரச்சனையை அதிமுக சட்டசபையிலும் கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து விக்னேஷின் மரணம் குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. 

மேலும், உயிரிழந்த கைதி விக்னேஷின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு பற்றி சட்டசபையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விக்னேஷ் மரணம் விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மேலும் 4 காவலர்களையும் கைது செய்தனர்.

இந்நிலையில், விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் கைதான 6 காவலர்களுக்கும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai trial prisoner murder case 6 police ordered to be kept in court custody


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->